அமிலத் தாக்குதலுக்கு இலக்கான தந்தையும் மகளும்; இலங்கையில் கொடூரம்
அம்பத்தளை பகுதியில் அசிட் வீச்சுத் தாக்குதலில் தந்தையும் மகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லேரிய, அம்பத்தளை பகுதியில் இன்று (11) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் இந்த அமிலத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அசிட் வீச்சு
வீதியில் நின்றிருந்த ஒருவரால் இந்த அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த தந்தை கொழும்பு கண் வைத்தியசாலையிலும் மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிலும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.