வாகன விபத்தில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழப்பு
கொழும்பு வாகன விபத்தில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கொழும்பு - கடுவெல பிரதேசத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தொடர்பில் தெரிய வந்தவை
இந்தக் கோர விபத்தில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற 48 வயதுடைய தந்தையும், அதில் பயணித்த 22 வயதுடைய மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தனது மகளை வேலை முடிந்த பின்னர் வீட்டுக்கு ஓட்டோவில் தந்தை அழைத்துச் சென்றபோதே விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.