கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் ; காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசன் எம்.பியின் கருத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் கமல்ஹாசன் சனாதனம் பற்றி பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், துணை நடிகரான ரவி என்பவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
அதில் "கமல்ஹாசனின் சங்கை அறுப்போம்" எனப் பேசியுள்ளதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், இதனைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், துணைத்தலைவர் மவுரியா மற்றும் நிர்வாகிகளான கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ், மயில்வாகனன், அர்ஜுனர் ஆகியோர் சென்னை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதில், கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள நடிகர் ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறைப்பாடளித்துள்ளனர்.