சிறையிலிருந்து தப்ப முயன்றவருக்கு நேர்ந்த கதி
பள்ளேகல திறந்த வெளி சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற இருவருள் ஒருவர், விக்டோரியா நீர்த்தேக்கத்துக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையிஒல் தப்பிக்க முயன்ற மற்றைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் ஒரு வருடத் தண்டனையின் கீழ், தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு தப்பிச் செல்வதற்காக, விக்டோரியா நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் பாணந்துறையைச் சேர்ந்த 34 வயதான சந்தேகநபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு நபரே தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து தப்பிச்சென்றவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பள்ளேகல சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.