தமிழர் பகுதியில் ஒருவரின் உயிரை பறித்த கோர விபத்து ; தீவிரமாகும் விசாரணை
திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை
கந்தளாய் பகுதியில் இருந்து ஹபரணை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி, கித்துல்உத்துவ பகுதியில் வீதியின் வலதுபுறத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் செல்வதற்காக திடீரென திரும்பியுள்ளது.
இதன்போது, ஹபரணை பகுதியில் இருந்து வந்த கார், முச்சக்கரவண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார், அதில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்து கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கித்துல்உத்துவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சிற்றூந்தில் பயணித்தவர்கள் ஹபரணை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சிற்றூந்தில் பயணித்தவர்கள் ஹபரணை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலி்ஸ் போக்குவரத்துப் பிரிவு முன்னெடுத்து வருகிறது