ஜனாதிபதி உருவப் பொம்மை மீது கோபத்தை காட்டிய விவசாயிகள்!
அநுராதபுரம் – பதவிய பிரதேசத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொடும்பாவி மீது விவசாயிகள் கோபம் கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினிடையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பசளை கேட்டும் இரசாயனப் பசளை மீதான தடையை நீக்கும்படி கோரியும் விவாசயிகள் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்துள்ள நிலையில், இன்றைய தினமும் பல இடங்களிலும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அநுராதபுரம் – ரம்பேவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் நபர் ஒருவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போன்று வேடம் அணிந்து வந்துள்ள சந்தர்ப்பத்தில் விவசாயிகள் அந் நபரை அடித்து விரட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.