விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்! விவசாய அமைச்சு வெளியிட்ட அறிக்கை
இலங்கையில் பெரும்போக நெற்செய்கைக்கான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு உலக வங்கி ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி அனைத்து மக்களையும் பெரிதும் பாதித்துள்ள நிலையில், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த காலங்களில் நெற்செய்கைக்கான தேவையான உரம் இன்மையால் நெல் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
இதனிடையே இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த மாதம் முதல் வாரத்தில் 65ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.