முதியவரை பலி எடுத்த காட்டு யானை ; சோகத்தில் தவிக்கும் உறவினர்கள்
வவுணதீவு பாலக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவற்காடு பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விவசாயி வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்கு சம்பவ தினம் இரவு சென்றவர் காலையாகியும் வீடு திரும்பி வராத நிலையில் உறவினர்கள் அவரை தேடிச் சென்ற போது அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.