இன்றுமுதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு!

Power cut Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Minister of Energy and Power
By Sulokshi Feb 15, 2023 04:04 PM GMT
Report

   இன்று (15) முதல் 66% மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெரும்பான்மையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தலைவர்.ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இலங்கை மின்சார சபைக்கு 287 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையில், 66% மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கான பிரேரணை ஜனவரி 02 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இன்றுமுதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு! | Fare Increase Effective From Today

பலர் இராஜினாமா

எனினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டதுடன், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் அதன் உறுப்பினர்கள் பலர் இராஜினாமா செய்தனர். இதனையடுத்து மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க நேற்று கலந்துரையாடியிருந்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளின்படி 142 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டுவதற்காக 36% குறைந்த மின் கட்டண உயர்வை தயாரித்து நேற்று ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு தலைவர் சமர்ப்பித்துள்ளார்.

தலைவர் மாத்திரம் இதனை அங்கீகரித்த போதிலும் ஏனைய மூன்று உறுப்பினர்களான சட்டத்தரணி சத்துரிக்கா விஜேசிங்க, டக்ளஸ் நாணயக்கார மற்றும் எஸ். ஜி. சேனாரத்ன எதிர்ப்பு தெரிவித்ததால் நிராகரிக்கப்பட்டது. அதனையடுத்து இலங்கை மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை 66% ஆல் அதிகரிப்பது தொடர்பான பிரேரணையை ஏனைய மூன்று உறுப்பினர்களும் சமர்ப்பித்து அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினர்.

ஜானக ரத்நாயக்க  அறிக்கை

இது தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டண அதிகரிப்பு பிரேரணையின் ஊடாக, உள்நாட்டுத் துறையில் 90 அலகுகளுக்குக் குறைவாகப் பாவனை செய்யும் குழுக்கள் 250 வீத கட்டண அதிகரிப்பைக் காணவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இன்றுமுதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு! | Fare Increase Effective From Today

இந்த புதிய திருத்தத்தின்படி, உள்நாட்டு பிரிவின் கீழ் அசல் 30 அலகுகளுடன் ஒப்பிடுகையில், தற்போது ஒரு அலகு 8 ரூபாய் கட்டணம் 30 ரூபாயாக அதிகரிக்கப்படும். 31 முதல் 60 அலகுகளுக்கு ரூ.10 முதல் ரூ.37 ஆகவும், 61 முதல் 90 அலகுகளுக்கு ரூ.16 முதல் ரூ.42 ஆகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

91 முதல் 120 அலகு வரையிலான பிரிவினருக்கு ரூ.50 மற்றும் 121 முதல் 180 அலகு வரையிலான பிரிவினருக்கு தற்போதைய கட்டணமான ரூ.50, 181 அலகுக்கு மேல் உள்ள ஒவ்வொரு அலகுக்கும் ரூ.75 என்ற தற்போதைய கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும், நிலையான கட்டணங்களும் அதிகரிக்கும், அதன்படி முதல் 30 அலகுகளுக்கான நிலையான கட்டணம் ரூ.400 வரையிலும், 31 – 60 வரையிலான அலகுகளுக்கு ரூ.550, 61 – 90 வரையிலான அலகுகளுக்கு ரூ.650 வரைக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், 91 முதல் 120 அலகு வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 1,500 ரூபாயாகவும், 121 முதல் 180 அலகு வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

மத வழிபாட்டுத் தலங்கள், தொண்டு நிறுவனங்கள், தொழில் துறைகள், பொதுப்பணித்துறை, ஹோட்டல்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு மின்கட்டணம் மற்றும் நிலையான கட்டணங்களை உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. தொழில் துறைக்கு, முதல் 300 அலகு பிரிவின் கீழ் அலகு ஒன்றுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.26 ஆக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

அதேசமயம் , இந்த புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு உட்பட பல தரப்பினர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US