டெல்லி ஷாப்பிங் மாலில் நடிகர் விஜயை சூழ்ந்த ரசிகர்கள் பட்டாளம்: வெளியான காணொளி!
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளத்தை ஏராளமாகக் கவர்ந்த மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் தற்பொழுது வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெறுவதோடு வசூலிலும் அள்ளிக் குவிப்பது தெரிந்ததே. மேலும் தளபதி விஜய் தற்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.
அத்தோடு இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருவதும் இப்படத்தின் முதலாம் கட்டப்படப்பிடிப்பானது ஜோர்ஜியாவில் நடைபெற்றது.மேலும் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பானது சென்னையிலும் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது என்பதும் அறிந்ததே.
#BEAST Exclusive unseen VIDEO: Thalapathy #Vijay was spotted at the DLF Promenade Mall after wrapping up the 4th schedule in New Delhi! ? @actorvijay @Jagadishbliss #Beast#Master #ThalapathyVijay pic.twitter.com/N0jfkjrC78
— ᴠᴊ ᴘᴀʟᴀɴɪᴠᴇʟ ᴠꜰᴄ (@VjPalanivel_Vfc) September 25, 2021
மேலும் டெல்லியில் 5 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகு டெல்லியில் இருக்கும் DLF Promenade ஷாப்பிங் மாலுக்கு சென்றிருக்கிறார் விஜய். மாஸ்க் அணிந்து மக்களோடு மக்களாக அவர் மாலில் நடந்து சென்றார். அவர் யார் என்பதை அடையாளம் தெரிந்து கொண்ட ரசிகர்கள் காணொளி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
மேலும் பீஸ்ட் படத்தை பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப் போகிறார்களாம். படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் நிறைவடையும் என்று கூறப்படுகிறதும் குறிப்பிடத்தக்கது.