கொழும்பில் பிரபல பாடகர் ஹரிஹரனுக்கு அதிர்ச்சி கொடுத்த ரசிகர்கள்!
பிரபல தென்னிந்திய சினிமா பாடகர் ஹரிஹரன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் கொழும்புவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடகர் ஹரிஹரன் , 'காதல் ரோஜாவே’ பாடலை இந்தியில் பாடினார்.
இதனையடுத்து அவர் இந்தியில் அப்பாடலை பாட கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்கள் சட்டென கோரஸாக தமிழில் 'காதல் ரோஜாவே’ பாடலை பாடி பரவசப்படுத்தியுள்ளனர்.
#Watch | கொழும்புவில் நடந்த இசை நிகழ்ச்சியில், 'காதல் ரோஜாவே’ பாடலை இந்தியில் பாடிய பாடகர் ஹரிஹரன்
— Sun News (@sunnewstamil) August 26, 2023
சட்டென கோரஸாக தமிழில் பாடத் தொடங்கிய ரசிகர்கள்#SunNews | #KadhalRojave | #Hariharan | @SingerHariharan pic.twitter.com/QzrijpWw1z
பாடகர் ஹரிஹரன் தமிழில் மட்டுமல்லாது பல்வேறுமொழிகளிலும் சினிமா பாடகளை பாடியுள்ளார். 90 ஆம் ஆண்டுகளில் இவரது பாடல்கள் பெரும் பிரபலமானவை என்பதுடன் இன்றளவும் இவர் பாடிய பல பாடல்கள் மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளது.