பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார்! பெரும் துயரத்தில் ரசிகர்கள்
90ஸ் கிட்ஸ்களுக்கு விருப்பமான தொகுப்பாளர் என்று அறியப்பட்டவரும், பல்வேறு கிராமப்புற கலைகளை தொடர்ந்து சர்வதேச அளவில் அரங்கேற்றியவருமான ஆனந்த கண்ணன் நேற்றிரவு மரணம் அடைந்தார்.
ஊடக உலகையும், இவரின் ரசிகர்களையும் இந்த மரணம் உலுக்கி உள்ளது. இவருக்கு ஏற்பட்ட புற்றுநோய் மிக மிக அரிதானது என்பதால் இவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்தகண்ணன் புகைப்படத்தை இட்டு இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு பதிவை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
A great friend a great human is no more!! #RIPanandakannan my deepest condolences pic.twitter.com/6MtEQGcF8q
— venkat prabhu (@vp_offl) August 16, 2021
இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாது சிங்கப்புரிலும் ஒரு பெரிய தொகுப்பாளராக தான் உள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வந்த நிலையிலே இப்படியொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மேலும் அவரின் மறைவுக்கு சமூகம் மீடியா சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.