கொழும்பில் பரபரப்பு... சடலமாக மீட்கப்பட்ட பிரபல ஊடகவியலாளர்!
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகப் பணியாற்றிய இந்துனில் ஜயவர்தன சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது சடலம் மோதரை கடற்கரைப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் இவர் இரு நாட்களாக தனது வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவரின் மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை அறிய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துனில் ஜயவர்தன இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் வெளி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.