சமய நடவடிக்கைக்காக சென்ற இரு பிள்ளைகளின் தாய் விபத்தில் பலி
மொனராகலை-வெல்லவாய வீதியில் மல்வத்தவெல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று (01) மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் உயிரிழந்ததாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வெல்லவாய, வீரசேகரகம பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிகிச்சை பலனின்றி பலி
கடந்த 31 ஆம் திகதி வீட்டிற்கு அருகில் நடைபெற்ற சமய நடவடிக்கையில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வெல்லவாய நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதி படுகாயம் அடைந்துள்ளார்.
இதன் போது வெல்லவாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காயமடைந்து வெல்லவாய ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.