கணவரை இழந்து தனித்திருந்த மூன்று பிள்ளைகளின் தாய்க்கு மர்ம நபரால் அரங்கேற்றப்பட்ட கொடூரம்
அயகம, துல்கல பகுதியில் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அயகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலை நேற்று (13) காலை இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவர் பதுகெதராவைச் சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச்சம்பவம்
அவரது கணவர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாகவும் கொலை செய்யப்பட்ட பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று குழந்தைகளும் பாடசாலையில் இருந்தபோது குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்தபோதும் வீட்டிற்குள் நுழைந்த ஒரு நபரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.