தீ விபத்தில் சிக்கிய குடும்பம் ; இளம் தாய் பலி; தந்தை மற்றும் மகள் கவலைக்கிடம்
புத்தல, நாமண்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 26 வயது தாய் இன்று (18) காலை உயிரிழந்த நிலையில் தந்தை மகள் சிகிச்சையில் உள்ளதாக கூறப்படுகின்றது.
புத்தல-மொனராகலை வீதியில் உள்ள அரச தானியக் கடைக்கு அருகில் அமைந்துள்ள இந்த வீட்டின் ஒரு அறையில் நேற்று காலை தீப்பரவல் ஏற்பட்டதாக புத்தல காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீட்டு அறையில் இருந்த எரிபொருள் பம்பில் தீ
வீட்டு அறையில் இருந்த எரிபொருள் பம்பில் தீப்பிடித்ததில் அவர்களின் சத்தம் கேட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அருகிலுள்ள அரச தானியக் கடையின் மேலாளர் மற்றும் பிரதேச காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீக்காயமடைந்த மூவரும் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர், தாயின் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று காலை தாய் உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த 29 வயதுடைய அவரது கணவரும் 03 வயதுடைய மகளும் மேலதிக சிகிச்சைக்காக காலியில் உள்ள கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக புத்தல காவல்துறையினர் தெரிவித்தனர்.