வைரலாகும் இமான் அண்ணாச்சியின் குடும்ப புகைப்படம்!
பிக்பாஸ் சீசன் 5 இல் இமான் அண்ணாச்சி கலந்துகொண்டுள்ள நிலையில் , அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்சியை காணபதில் ஆரம்பத்தில் ரசிகர்களிடையே சற்று ஆர்வம் குறைவாக காணப்பட்ட நிலையில் தற்போது போட்டியாளர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து சண்டையிடத் துவங்கியுள்ளதால் நிகழ்ச்சி சூடு பிடிக்கத்துவங்கியுள்ளது.
அதோடு போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ரசிகர் பட்டாளம் உருவாகத் துவங்கியுள்ளது. அந்த வகையில் நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சியின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.
மற்ற போட்டியாளர்களிடையே பிரச்னை ஏற்படும்பொழுது அவர் சரியான முடிவெடுத்து வருவதாக கருத்து நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இமான் அண்ணாச்சி பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் .
அந்த நிகழ்ச்சியின் கிடைத்த புகழின் காரணமாக ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் அவர் நடித்து பலரையும் கவர்ந்த நகைச்சுவை நடிகராக உள்ளார்.
தொடர்ந்து தற்பொழுது அவர் பிக்பாஸ் போட்டியாளரான நிலையில் இமான் அண்ணாச்சி தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
