வவுனியாவில் தீயில் எரிந்து பலியான குடும்பப்பெண்... கைது செய்யப்பட்ட கணவர்
வவுனியா மாகாணத்தில் குடும்பப்பெண் ஒருவர் தீயில் எரிந்து பலியாகியுள்ளார், இதில் சந்தேகத்தின் பெயரில் உயிரிழந்த பெண்ணின் கணவர் பூவரசன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பில் வெளியான தகவலானது, வவுனியா,கர்பகபுரம், நான்காம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் கூரை மற்றும் யன்னல் துவாரம் வாயிலாக தீயின் புகை வெளியானதை தொடர்ந்து அக்கமபக்கத்தினர் சென்று பார்த்தபோது அங்கே வீட்டின் பெண்னொருவர் தீயில் எரிந்துகொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அந்த பெண்ணின் மீது தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் முழுவதுமாக தீயில் எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மக்கள் பூவரசன்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது, குறித்த பெண்ணின் கணவர் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், கணவன் மனைவி இடையே கடந்த சில மாதங்களாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை கணவர் வேலைக்கு செல்லாது வீட்டிற்கு வந்துள்ளார்.இதன்போது வீட்டில் குறித்த பெண் மீது தீ பற்றியுள்ளது. வீடு தீயில் எரிவதைக் கண்டா பொது மக்கள் அங்கு வருகை தந்தபோது வீட்டில் கணவர் மட்டும் இல்லை. இருப்பினும் பொதுமக்கள் வீட்டின் மீது தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றபோதும் பலனின்றி அந்த பெண் பெண் உயிரிழந்தார்.
கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் அனற்றா என்பவர் தான் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கணவர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.