வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்: வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!
வவுனியாவில் உள்ள புதிய கற்பகபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் தூக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதிய கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த வாகனம் திருத்தும் தொழில் புரியும் 2 பிள்ளைகளின் தாந்தையான 40 வயதுடைய ரூபன் என்பவர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்றைய தினம் (18-08-2023) பிற்பகல் அவரது மனைவி வெளியில் சென்று திரும்பிய வேளை கணவரான ரூபன் தூக்கில் சடலமாக கிடந்ததை கண்டுள்ளார்.

தொடர்ந்து கிராம மக்கள் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கிய பின் பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் வவுனியாவில் விபத்தில் ஒருவரும், நீரில் மூழ்கி 2 சிறுவர்களும், தற்சமயம் குறித்த குடும்பஸ்தருமாக 4 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.