பதின்ம வயது சிறுமியை சீரழித்த குடும்பஸ்தர்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா- பிரவுன்ஸ்வீக் தோட்ட பிரவுன்ஸ்வீக் பிரிவில் வசிக்கும் 15 வயதான சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக திருமணமான 32 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டார்.
சிறுமி வைத்திய சாலையில் அனுமதி
பாதிக்கப்பட்ட சிறுமி, தாத்தா பாட்டியின் பாதுகாப்பிலேயே இருந்த நிலையில் , குடும்பஸ்தரின் வீட்டுக்கு, அவ்வப்போது சென்று வந்த நிலையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படுகின்றது.
கிடைக்கபெற்ற தகவலையடுத்து குடும்பஸ்தரை கைது செய்த பொலிஸார், சிறுமியை டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
சந்தேக நபர் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்ட போது எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.