தமிழர் பகுதியில் வீடொன்றில் உயிரிழந்து கிடந்த குடும்பஸ்தர்! பரபரப்பு சம்பவம்
தலைமன்னார் - செல்வேரி கிராமத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இன்றைய தினம் (28-12-2023) காலை உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 43 வயதான மரியதாஸ் ரொனால்ட் ரீகன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக என தெரியவந்துள்ளது.
நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக குறித்த கிராமத்தில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள தனது இல்லத்தில் கடந்த 26 ஆம் திகதி இரவு உறக்கத்திற்கு சென்றுள்ளார்.
உறக்கத்திற்கு சென்ற அவர் இன்றைய தினம் (28) காலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கடந்த இரு நாட்கள் காணாத நிலையில் உயிரிழந்த நபரின் நண்பர் ஒருவர் இன்று (28) காலை அவரது இல்லத்திற்கு தேடிச்சென்ற நிலையில் மழை வெள்ளத்தில் இறந்து கிடந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக குறித்த நண்பர் உயிரிழந்தவரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு தகவலை தெரிவித்து தலைமன்னார் பொலிஸாரருக்கு தகவலை வழங்கியுள்ளார்.
இதேவேளை உயிரிழந்த நபர் வலிப்பு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.
சம்பவ இடத்திற்கு வந்த தலைமன்னார் பொலிஸ் மற்றும் தடவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சடலம் மேலதிக பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மனைவி பிள்ளைகள் மழை வெள்ளம் காரணமாக அருகாமையில் வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில் இவர் தனது இல்லத்தில் உறங்கச் சென்ற நிலையிலையே இன்றைய தினம் (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
[TJNR7UZ[