வீட்டின் மீது விழுந்த பாறையால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்
பாறையொன்று வீட்டின் மீது விழுந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வியாழக்கிழமை (05) காலை காலியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது வீட்டில் இருந்தபோது பாறையுடன் மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் சுவரை இடித்துத் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்குண்டு மரணமடைந்தவர்
இந்த விபத்தில் சிக்குண்டே இவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அவ் அனர்த்தத்தின் போது வீட்டில் இருந்துள்ளதாகவும் எனினும் அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கு மேலாக இருக்கும் மலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்தே இந்த பாறை புரண்டுவந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.