மட்டக்களப்பில் குடும்ப பெண் எடுத்த விபரீத முடிவு ; இரவில் கதி கலங்கி போன குடும்பம்
மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சனிக்கிழமை (17) இடம்பெற்றது
ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 18 ம் திகதி வரை 92 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் மீண்டும் மாவட்டத்தில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

மேலதிக விசாரணை
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா கணக்குபிள்ளை வீதியைச் சேர்ந்த 44 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் சம்பவ தினமான சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் வீட்டின் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 12ம் திகதி தற்கொலை செய்வதற்கு கல்லடி பாலத்தில் இருந்து வாவிக்குள் குதித்த 19 வயது இளம் யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியதுடன் கடந்த 15 ம் திகதி சித்தாண்டியில் 21 வயது இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடதக்கது.