மர்மநபர்கள் கொடுத்த கேக்கை உண்டதில் மயங்கி விழுந்த குடும்பத்தினர்
மர்மநபர்கள் கொடுத்த கேக்கை உண்டதில் மயங்கி விழுந்த குடும்பத்தினர் புத்தளம் நகரிலுள்ள வீடொன்றுக்கு வந்த மர்மநபர்கள் இருவர் வீட்டிலிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட கேக்கை உண்டதில் ஒரே குடும்பத்தினர் மயங்கி விழுந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குடும்பத்தினர் ஐவரும் மயங்கி விழுந்த நிலையில் அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
65 வயதுடைய ஆண் மற்றும் அவரது 63 வயது மனைவி, 29 வயது மகள், ஆணின் 86 வயது தந்தை மற்றும் 84 வயதான தாயார் ஆகியோர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் அனுராதபுரம் வீதியில் பக்க வீதியொன்றில் அமைந்துள்ள குறித்த வீட்டிற்கு இந்த இனந்தெரியாத மர்மநபர்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி நிறுவனம் ரூபாவை வழங்க ஏற்பாடு
இவ்வாறு வந்த சந்தேகநபர்கள் இதய சத்திரசிகிச்சைக்கு உள்ளான இந்த வீட்டின் உரிமையாளரிடம் நட்பைக் காட்டி அவரை சில காலமாகத் தெரியும் எனவும் நிதி நிறுவனம் ஒன்றின் மூலம் 50000 ரூபாவை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
உரிய காசோலையை வழங்குவதற்கு முன் இந்த தெரியாத நபர்கள் கொண்டு வந்த கேக்கை சாப்பிட்டு அதை படம் பிடித்து காசோலை வழங்க தயாராக உள்ள நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதன்படி வீட்டிலிருந்தவர்கள் கோரிக்கையை ஏற்று கேக் வெட்டி சாப்பிட ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால் அவர் ஒரு சிறிய கேக்கை மட்டும் சுவைத்ததாகவும் எதையும் குடிக்கவில்லை என்றும் வீட்டின் உரிமையாளரான இதய நோயாளி தெரிவித்துள்ளார்.
மூத்த மகளிடம் தெரிவித்து வீட்டு உரிமையாளர்
இவர்கள் மயங்கி விழுந்ததைக் கண்ட வீட்டு உரிமையாளர் உடனடியாக புத்தளம் நகரில் வேலை செய்யும் மூத்த மகளிடம் தெரிவித்துள்ளார்.
தந்தையின் தொலைபேசி அழைப்புக்கு பதில் கிடைக்காததால் மூத்த மகள் முச்சக்கரவண்டியில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் அனைவரும் மயங்கி கிடந்ததை அடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவர்களை புத்தளம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.