உயர்தர மாணவனின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பத்தினர்
அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவம் நேற்றையதினம் (09) புதன்கிழமை பதிவாகியுள்ளது.
உயர்தர பரீட்சை முடிவுக்காக காத்திருந்த மாணவன்
சம்பவத்தில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி புள்ளிகளுக்காக காத்திருக்கும் தனுஷன் இன்றும் மாணவன் தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது.
உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் மாணவனின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது,.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.