45 அடி குழியில் விழுந்த பெண்: ஆபத்தான நிலையில் சிகிச்சை
அம்பேகம பிரதேசத்தில் 45 அடி ஆழமான குழியில் பெண் ஒருவர் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, அம்பேகம, மிரிஸ்வத்த மலையகத்தில் 45 அடி ஆழமான குழியில் பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை உள்ளூர்வாசிகளின் உதவியுடன் போலீசார் மீட்டனர்.
மீட்கப்படும் போது பெண் ஆபத்தான நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, அவர் சிகிச்சைக்காக காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
குறித்த பெண் நேற்று பள்ளத்தில் விழுந்து விட்டதாகவும், இதுவரை வாக்குமூலம் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.