கர்தினால் மெல்கம் ரஞ்சித் தொடர்பில் பரவும் போலி செய்தி
கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பதவி விலகப்போவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜுட் கிரிஷாந்த இன்று (24) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
செய்தி சேவை பேராயர்கள் தொடர்பான முடிவுகள் அனைத்தும் வத்திக்கானினால் மட்டுமே எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கத்தோலிக்க திருச்சபையின் விதிமுறைப்படி, ஒரு கர்தினால் 80 வயதை எட்டும்போது ஓய்வுபெற வேண்டும் என்றாலும், அதன் இறுதி முடிவை திருத்தந்தை மட்டுமே தீர்மானிப்பார். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எதிர்வரும் ஆண்டே 80 வயதை எட்டவுள்ளார்.
எனினும், அவரது ஓய்வு குறித்து இதுவரையில் உத்தியோகபூர்வமான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என அருட்தந்தை ஜுட் கிரிஷாந்த மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.