இலங்கை பொலிசார் என போலி விளம்பரங்கள்! மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை பொலிஸின் பெயரைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல எனவும், பொதுமக்கள் இவற்றைக் கண்டு ஏமாற வேண்டாம் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் அனைத்து விளம்பரங்களும் உண்மையானவை அல்ல.
இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இலச்சினையுடன், 'Sri Lanka Police' இன் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மற்றும் அறிவித்தல்களை மட்டுமே பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.