தோல்வியில் முடிந்த தொழிற்சங்க நடவடிக்கை!
தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினம் (15-03-2023) தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஒரு சில தொழிற்சங்கங்கள் மாத்திரமே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், பணிப்பகிஷ்கரிப்பு முழுமையாக செயற்படுத்தப்படவில்லை எனவும் நாயகம் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இன்று பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகள் உரியவாறு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சங்கங்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் பரிந்துரைக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.