22 ஆவது திருத்தச் சட்ட வாக்கெடுப்பில் வாக்களிக்க தவறியவர்கள்
நாடாளுமன்ற அரசாங்க அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட பட்டியலின்படி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட வாக்கெடுப்பில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தவறிவியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த பட்டியலின் படி பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் வெளிநாட்டில் இருந்ததால் வாக்களிக்க தவறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனர்.
22ஆவது திருத்தச் சட்டம் வெள்ளிக்கிழமை (21) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, இதற்கு ஆதரவாக 174 எம்.பி.க்கள் வாக்களித்ததோடு ஒரு எம்.பி மட்டும் எதிராக வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாக்க உள்ளது.
மேலும் இலங்கை பொதுஜன பெறமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அதற்கு எதிராக வாக்களித்த அதேவேளையில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வாக்களிப்பின் போது சபைக்கு வரவில்லை எனவும் கூறப்படுகின்றது.