படுதோல்வியடைந்த மொட்டு கட்சி! வன்முறையால் பலர் மருத்துவமனையில்
குளியாப்பிட்டிய கிழக்கு கூட்டுறவு சங்கத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில், ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி படுதோல்வியடைந்தது.
மொட்டு சார்பில் தேர்தலில் போட்டியிட்ட குழு 25 வாக்குகளை மாத்திரமே பெற்றது எதிர்க்கட்சிக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட குழு 67 வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றது.
கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 92 ஆகும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட குழுவை தோற்கடித்து பல்வேறு கட்சிகளால் உருவாக்கப்பட்ட குழு வெற்றி பெற்றதை அடுத்து அங்கு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த வன்முறையில் காயமுற்றோர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.