தமிழக கோவில் ஒன்றில் இடம்பெறும் முகம் சுழிக்க வைக்கும் செயல்கள்! இதற்கு காரணம் யார்?
சமீபத்தில் வயதான கோவில் அர்ச்சகர் ஒருவரை நபர் சந்தித்துள்ளார். அவரின் ஆதங்கத்தை குறித்த நபர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவர் ஒரு வயதான பூசாரி. அவருக்கு என்று எந்தவித சொந்தமும் சொத்தும் இல்லாமல் காலமும் கடவுளே கதி என்று தன் ஊரில் உள்ள மிகப் பழமையான சிவாலயத்தில் ஊதியமே இல்லாமல் கிடைக்கும் சிறிதளவு உணவை மட்டும் உண்டுகொண்டு பெருமானுக்கு சேவை சாதித்து வருபவர்.
சில நாட்களுக்கு முன் அவர் வாழும் கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டிற்கு வாடகை வண்டி ஓட்ட வந்த டேக்ஸி டிரைவர், அந்த கோவிலின் சுற்றுச்சுவரில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதை பார்த்தவுடன் அந்த முதியவரும் தள்ளாத வயதில் அந்த நபரிடம் சென்று மிகவும் மரியாதையான குரலில் கோவில் பிரகாரத்தில் இப்படி செய்யலாமா இது தவறில்லையா என்று கேட்டிருக்கிறார்.
இத்தனைக்கும் அந்த நபர் விபூதி குங்குமம் வைத்து கொண்டு ஒரு ஹிந்துவாக தான் தோற்றமளித்திருக்கிறார்! இவர் கேட்டதற்கு "அவசரமா வந்துருச்சு வேற என்ன பன்ன சொல்ற? அவசரமா வந்தா இடத்த பாக்க முடியுமா? வேணும்னா சாரி சொல்லிக்கிறேன்! வேற என்ன பன்ன சொல்ற?" என்று எகத்தாளமாத பதிலளித்துவிட்டு அவரது காலில் வண்டி டயரை ஏற்றுவது போன்ற வேகத்தில் சர்வ சாதாரணமாக அலட்சியமாக சென்றுள்ளார்.
இந்த முதியவரும் வேறு வழியின்றி ஆண்டவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு அங்கிருந்து விலகி தன் பணியை செய்ய கிளம்பி விட்டதாக கூறினார்.
நம்ம ஜனங்களே நம்ம கோவிலை மதிக்காட்டி எப்படிப்பா என்று புலபினார். இது போக சுற்றி இருக்கும் அத்தனை மக்களும் அந்த கோவிலின் நுழைவுவாயிலின் அருகில்தான் தங்களது வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவர் பல முறை கெஞ்சிய பிறகும் அசைவ உணவு குப்பைகள் உட்பட அனைத்துமே கோவிலின் வாயிலின் அருகே தான் கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நான் சென்ற போது என்னால் முடிந்த அளவு சுத்தப்படுத்தி கொடுத்து விட்டு வந்தேன். அங்கு குப்பையை கொட்டுபவர்கள் யாரோ வேற்று மதத்தவர்கள் அல்ல. செவ்வாய் வெள்ளி ஆனால் அதே கோவிலில் தீபம் ஏற்றி வழிபடும் நமது இந்து மக்கள் தான்.
இதே போல் நமக்கு தெரியாத பல ஆலயங்கள் இப்படித்தான் இந்துக்களாலேயே மிகவும் கேவலமாக நடத்தப்படுகின்றன.
உண்மையில் அறநிலையத்துறை ஆட்டம் போட காரணம் இது போன்ற பொருப்பற்ற இந்துக்களால் தான் என சமூக ஆர்வலர் ஒருவர் குறித்த பதிவை முகநூல் (Mata) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.