ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு
கிரிஷ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம் கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலை அதிகாரிகளினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கில் நாமல் ராஜபக்ச பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட போதிலும் , கடந்த 18ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த பிணை உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.