யாழ் சாவகச்சேரி வைத்தியசாலை தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய மருத்துவர் ; அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெறும் தில்லுமுல்லுகள் தொடர்ல் பகீர் தகவல்களை, சாவகச்சேரி வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் அம்பலப்படுத்தியுள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலையை மேம்படுத்த அயராது உழைக்கும் தன்னை வைத்தியசாலை பொறுப்பதிகாரி பதவியில் இருந்து அகற்ற சில வைத்தியர்கள் முயற்சிப்பதாக , அதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் துணை போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,
வெளியான அதிர்ச்சித்தகவல்கள்
யாழ்ப்பாணத்திற்கு நான் வர கூடாது என்பதற்காக பலதரப்பின் ஊடாக வடமாகாண சுகாதார திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டபோதும் அவற்றி மீறி நான் சாவகச்சேரி வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக கடமையாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தான் கடமையேற்ற சில நாட்களாகும் நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக இயங்காது இருந்த சிகிச்சை சில பிரிவுகளை மீள இயங்க வைத்துள்லதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர்.
அதேசமயம் வைத்தியசாலையில் உள்ள சில மருத்துவர்கள் , சாவகச்சேரி மருத்துவமனைக்கு வரும் விபத்து , பிள்ளைப்பேறு உள்ளிட்ட சத்திர சிகிச்சைகளுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி விட்டு தமது கடமைகளை செய்யாது அவர்கள் ஊதியம் பெறுவதாகவும், அதில் தென்னிலங்கையை சேர்ந்த மருத்துவர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது குறித்த சிகிச்சை பிரிவுகள் மீள திறக்கப்பட்டு அவற்றை இயங்கு நிலைக்கு கொண்டு வரும் போது அவர்கள் அத்ற்கு முட்டுக்காட்டையாக இருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
வேலை செய்யாது சம்பளம் வாங்கும் மருத்துவர்கள்
வைத்தியசாலையின் மருந்து களஞ்சியம் சீரான முறையில் இல்லை. பல மருந்துகள் நிலத்திலையே வைக்கப்பட்டுள்ளன.
ஒழுங்கான குளிரூட்டல் வசதிகள் இன்றி , குறைபாடுகளுடன் மருந்து களஞ்சிய சாலைகளில் மருந்துகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளா இந்த நிலை தொடர்கின்றபோதும் இவை தொடர்பில் எந்த நடவடிக்கையும் வடமாகாண சுகாதார திணைக்களம் முன்னெடுக்கவில்லை.
பதவியை விட்டு விலக்க பலர் முனைப்பு
சாவகச்சேரி வைத்தியசாலை உடற்கூற்று பரிசோதனை செய்யாது சடலங்களை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பார்கள். அங்கு உடற்கூற்று பரிசோதனைகளை முன்னெடுக்க காலதாமதமாகும். அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி 50 ஆயிரம் ரூபாய் வரையில் உழைத்துக்கொள்கின்றனர்.
அதேவேளை சத்திர சிகிச்சை கூடத்தினை நாளைய தினம் வெள்ளிக்கிழமை இயங்கு நிலைக்கு கொண்டு வந்த நிலையில் அவற்றினை குழப்புவதற்கு சில வைத்தியர்கள் தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் யாழ்ப்பாணத்தில் பிறந்த தான் இவர்களுக்கு அஞ்சப்போவதில்லை என்றும், தன்னுடைய பணியினை செவ்வனே செய்யத் தயங்கமாட்டேன் என்றும் அவர் உறுதிபடக்கூறியுள்ளார்.
இந்நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலை குறித்த மோசடிகள் அம்பலத்திற்கு வந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.