பிரான்ஸில் யாழ்.முதல்வருக்கு அளிக்கப்பட்ட விளக்கம்! எதற்கு தெரியுமா?
பிரான்ஸ் நகரங்களில் மேற்கொள்ளப்படும் திண்மக்கழிவகற்றல் மற்றும் மீள்சுழற்சி செயற்பாடுகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பில் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு விளக்கமளித்துள்ளனர்.
நேற்றைய தினம் (03-05-2022) பிரான்ஸ் ஆர்ஜேந்தை மாநகர சபை முதல்வரின் ஏற்பாட்டில் குறித்த செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற AZUR என்னும் தனியார் நிறுவனத்திற்கு நேரில் சென்று இவ் கழிகவற்றல் மற்றும் மீள்சுழற்சிகள் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நடைபெற்றது.
பிரான்ஸில் இருக்கும் 4 மாநகர சபைக்குரிய கழிவற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் AZUR நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்முறை விளக்கத்திலுடன் கூடிய கலந்துரையாடலில் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் நிறுவன இயக்குநர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிறுவனம் யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவகற்றலை மேம்படுத்த எவ்வாறான உதவிகளை தங்களால் வழங்க முடியும் என்பதை ஆராய்ந்து அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை விரைந்து செயற்படுத்துவதாக தெரிவித்தனர்.