கனடா கூட்டத்தில் சுமந்திரன் - சாணக்கியன் ஏற்பட்ட நிலை தொடர்பில் மாவை திடீர் முடிவு
கனடாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பில் கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் நேற்று முன்தினம் கனடாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு வருகை தந்த சிலரால் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியின்போது மாவை சேனாதிராஜா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.