நால்லூர் கந்தசாமி ஆலய பூஜையில் கலந்துகொண்ட 11ஆவது நிர்வாக அதிகாரி!
யாழில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 1-வது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த (09.10.2021) திகதி சிவபாதமடைந்தார். அன்றைய தினம் இருந்து, குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலம் ஆரம்பமானது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 11அவது நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்றைய தினம் காலை ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்தார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10-வது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் 1964 டிசம்பர் 15 முதல் கடந்த (09-10-2021) திகதி அவர் இறைபாதமடையும் வரை அவரே நிர்வாக அதிகாரியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.