விமானத்தில் இளம் தம்பதியினரால் ஏற்பட்ட பரபரப்பு: வெளியான பின்னணி தகவல்
ஸ்கொட்லாந்து நோக்கி புறப்பட தயாரான விமானம் ஒன்றில் இளம் தம்பதியினரால் ஏற்பட்ட பரபரப்பை அடுத்து, குறித்த விமானம் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை (23) அமெரிக்காவைச் சேர்ந்த ஆண், மற்றும் இரஷ்யாவைச் சேந்த பெண் தம்பதியினர் AF 1486 எயார் பிரான்ஸ் விமானத்தில் Roissy-Charles-de-Gaulle நிலையத்தில் இருந்து ஸ்கொட்லாந்தின் Edinburgh நகர் நோக்கி புறப்பட தயாராக இருந்தனர். அவர்கள் இருக்கையில் அமர்ந்ததும், அவர்களிடம் மர்ம பொதி ஒன்று இருந்துள்ளது.
குறித்த பொதி அங்கும் இங்கும் அசைந்துகொண்டிருக்க, விமான பணிப்பெண் இதனை அவதானித்து விட்டு, அவர்களை நெருங்கியுள்ளார். குறித்த பைகுள் வளர்ப்பு நாய் ஒன்று இருந்துள்ளது. விமானம் மூலம் வளர்ப்பு நாயை அழைத்துச் செல்ல முடியாதென்பதால் விமானம் நிறுத்தப்பட்டது. ‘விமானம் புறப்பட தாமதமாகும்’ என அறிவிக்கப்பட்டது.
பின்னர் குறித்த தம்பதியினர் விமானத்தை விட்டு கட்டாயமாக வெளியேறவேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர் வளர்ப்பு நாயுடன் விமானத்தை விட்டு வெளியேறிய அவர்கள், விமான நிலையத்தில் நாயினை ஒப்படைத்து விட்டு மீண்டும் விமானத்தில் ஏறிக்கொண்டனர்.
இச்சம்பவத்தினால் விமானம் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த தம்பதியினருக்கு சில ஆயிரம் யூரோக்கள் தண்டப்பணம் அறவிட நேரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதேவேளை, ‘பாதுகாப்பு சோதனைகளை’ கடந்து இவர்கள் எவ்வாறு நாயை கொண்டுவந்தார்கள் எனவும் விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன.