அறநெறிப் பாடசாலைக்கான பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்
நாடளாவிய ரீதியில் அறநெறி பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.
பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய பாடசாலைகளின் இறுதிச் சான்றிதழ் பரீட்சை எதிர்வரும் (28.12.2023) மற்றும் (29.12.2023) ஆம் திகதிகளில் 669 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
பரீட்சை அனுமதி பத்திரங்களை சம்பந்தப்பட்ட அறநெறி பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
பரீட்சை அனுமதி பத்திரங்களை பெறாத விண்ணப்பதாரர்கள், அறநெறி பாடசாலையின் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://apps.exams.gov.lk/principals/admissions என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.