மகா நாயக்க தேரர்களிடம் ரணில் சரணாகதி! தான் தற்போது அரசியலில் இல்லை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய ஆகிய இரு பீடங்களினதும் மகா நாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இன்று (23) காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, மல்வத்து பீடத்தின் மகா நாயக்கர் அதிவணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கர் அதிவணக்கத்துக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோரைச் சந்தித்துள்ளார்.

இதன்போது , ரணில் விக்ரமசிங்க தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து மகா நாயக்க தேரர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மகா நாயக்கர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, தான் தற்போது அரசியலில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.