முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி பிணையில் விடுதலை
கைக்குண்டு ஒன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினருமான சம்பத் மானம்பேரியை பிணையில் விடுவிக்குமாறு தங்காலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்காலை மேல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை(11) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கமைய சந்தேகநபரை 10 000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 250 000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஸ் போதைப்பொருளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் இராசயனப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கைவசம் வைத்திருந்த குற்றசாட்டின் பேரிலேயே சந்தேகநபர் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மீதெனிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு பொலிஸாரால் மீட்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.