அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்றையதினம் (5) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே அகில விராஜ் கரியவசம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச ஊழியர்களைத் தனிப்பட்ட அல்லது அரசியல் நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவது ஊழல் குற்றமாகக் கருதப்படும் நிலையில், அது தொடர்பான கையூட்டல் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.