லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு ; பெண் உள்ளிட்ட மூவர் கைது
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பெண் உள்ளிட்ட மூவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, கைதான மூவரும் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 17ஆம் திகதி நாரஹேன்பிட்டி சுற்றுவட்ட வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அருகில் துசித ஹல்லோலுவ பயணித்த ஜீப் வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதன்போது ஹல்லோலுவாவும் அவரது சட்டத்தரணி தினேஷ் தொடங்கொடவும் வாகனத்தில் பயணித்திருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஜீப்பை வாகனத்தை வழிமறித்து, துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.