வீட்டுக்குள்ளே தற்கொலை செய்துகொண்ட முன்னாள் போராளி!
நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போரினாலும், அதன் பின்னர் ஏற்பட்ட கொரோனா தொற்றினாலும் மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி நிலையால் வாழ்வில் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
புதுக்குடியிருப்பில் திப்பிலி எனும் பிரதேசத்தில் வாழும் கணவரை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று படும் கஸ்ரங்களை இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி எடுத்துக் கூறுகின்றது.
குறித்த குடுமப்த்தின் தலைவர் முன்னாள் போராளி என்பதுடன், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் அண்மையில் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இந்நிலையில் நான்கு பிள்ளைகளுடன் இளம் தாயார் படும் கஸ்ரங்கள் சொல்லி மாளாது. அந்தவகையில் நமது உறவுப்பாலம் நிகழ்ச்சி அவர்களின் வாழ்வில் சிறு வெளிசத்தையேனும் கொண்டுவரும் என்பது அசைக்க முடியாது.