அரச காணியை அபகரித்து மனைவி பெயரில் ஹோட்டல்; கோட்டா கொடுத்ததை பறிக்கும் அனுர அரசாங்கம்!
அனுராதபுரம், பெரமியன்குள வனப்பரிபாலன சபைக்குச்சொந்தமான 60 பேர்ச்சஸ் காணியை ஆக்கிரமித்து அதில் மனைவியின் பெயரில் ஹோட்டல் அமைத்து வர்த்தகம் செய்து வந்த முன்னாள் அரசியவாதியின் ஹோட்டலை இடிக்க உத்தவிடப்பட்டுள்ளது.
அதன்படி வடமத்திய மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின், ஹோட்டலையும், அக்காணியிலுள்ள அனைத்து கட்டிடங்களையும் உடைத்து அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டா அரசால் வழங்கப்பட்ட சுகபோகம்
கடந்த ஆட்சியாளர்கள் எல்லாம் தமது கட்சி கூட்டாளிகள் கஷ்டப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக நாட்டின் அனைத்து வளங்களையும் கூறுபோட்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஜனாதிபதி அரகுமார அரசாங்கம், எவனாக இருந்தாலும் கவலையில்லை நாட்டின் வளங்கள் அனைத்தும் நாட்டுக்கே உரியது என்று திரும்ப பிடுங்கி எடுத்துக்கொண்டிருக்கின்றது.
தற்போது, அரசாங்கத்தின் கொள்கை முடிவின் பேரில், அனுராதபுரம் மாவட்டத்தில் குள ஒதுக்கீட்டு எல்லைகளை நிர்ணயிப்பதற்கான ஒரு திட்டத்தை நீர்ப்பாசனத் துறை தொடங்கியுள்ளது.
குள ஒதுக்கீட்டுப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒரு அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்றும், முன்னாள் ஆளுநரின் மனைவிக்கு அதை இடிக்க உத்தரவிட்டதாகவும் பிரதேச செயலாளர் கூறினார்.
அதேவேளை ஒரு மாதத்திற்குள் கட்டிடத்தை அகற்றத் தவறினால், அதை இடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பிரதேச செயலாளர் கூறினார்.
குள ஒதுக்கீட்டுப் பகுதியில் உள்ள பல ஹோட்டல்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அரசாங்க உத்தியோகபூர்வ குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை குறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் பிரதேச செயலாளர் கூறினார்.