தினமும் காலை வெறும் வயிற்றில் துளசி இலைகள் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
இந்து மதத்தை பொறுத்த வரை துளசிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. துளசியானது மத ரீதியாக முக்கியமானதாக கருதப்படுவது போல, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதால் ஆயுர்வேத மருத்துவத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
உண்மையில் துளசி ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. எனவே தினமும் இந்த இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இந்த பானத்தை குடித்து வருவதால் பல நோய்கள் நம்மை நெருங்காது. துளசி இலைகள் வாயையும் சுத்தம் செய்யும். என்பதால் வாய்வழி நோய்களில் இருந்தும் நம்மை தற்காத்து கொள்ளலாம்.
மேலும் துளசி இலைகள் ரத்தக் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 3- 4 துளசி இலைகளை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வது உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும்
இருமல் போன்ற பாதிப்புகளை குணப்படுத்த துளசி இலைகள் உதவுகின்றன. சுவாசக் குழாயில் ஏற்படும் அழற்சி அல்லது வீக்கத்தை தணிக்கிறது மற்றும் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி உள்ளிட்ட தீவிர அறிகுறிகளிலிருந்து துளசி இலைகள் நிவாரணம் அளிக்கிறது.
அதேபோல், துளசி இலைகள் சில சரும நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கிறது. தினமும் துளசி இலைககளை கொண்டு தேநீர் தயாரித்து குடிப்பது அசிடிட்டி பிரச்சனையை தடுக்கவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.
சளி, இருமல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கும், புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். துளசி இலைகளை அடிக்கடி சாப்பிட்டு வருவது சாப்பிடுவது எலும்புகளை வலுப்படுத்தவும், இதயத்தை ஆரோக்கியமாகவும் வைக்கும்.
மேலும் வாய் துர்நாற்றத்தை குறைக்கும். மன அழுத்தம் மற்றும் கவலை அலல்து பதற்ற உணர்வுகளை குறைப்பதிலும் துளசி பயனுள்ளதாக இருக்கும்