யாழில் நாளையதினம் மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ள நிகழ்வுகள்!
யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் (11-02-2023) சனிக்கிழமை 'யாழ் கலாசார மையம்' கையளிப்பு, இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் என்பன மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இவற்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, (Ranil Wickremesinghe) பிரதமர் தினேஸ் குணவர்த்தன (Dinesh Gunawardena) ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
நாளை காலை 9 மணிக்கு யாழ்ப்பாண கலாசார மையம் கையளிப்பு நடைபெறும்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் (L. Murugan) கலந்துகொள்ளவுள்ளார். அவருடன் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையும் பங்கேற்கவுள்ளார்.
இதன் பின்னர் மாலை 5 மணிக்கு இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் யாழ் கலாசார மையத்தில் நடைபெறும்.
இதன்போது வடக்கின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுதந்திர நாள் ஊர்த்திப் பவனி நடைபெறும்.
இறுதியாக இரவு 7 மணிக்கு முற்றவெளியில் இசை நிகழ்வு நடைபெறும்.
இந்த இரு நிகழ்வுகளும் ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.