இனவழிப்புப் போரே நாட்டின் நெருக்கடிக்குக் காரணம்! வசந்த முதலிகே
இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்புப் போரே பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணி என்பதை ஏற்றுக்கொள்வதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான சந்திப்பின்போது, எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் கேள்வி
இந்தச் சந்திப்பின் பின்னர், ‘கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை? என ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதோடு இப்போது நீங்கள் கைது செய்யப்பட்ட பின்னரே குரல் கொடுக்கின்றீர்கள்’ என்றும் வினவியபோது வசந்த முதலிகே அதற்கு பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.