இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
220 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 46.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட இந்த தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்யப்பட்டுள்ளது.