மூதூரில் பொறியியல் பீட மாணவன் கோர விபத்தில் பலி ; வெளிநாடு செல்லவிருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

சரணடைந்த சாரதி
விபத்தில் மூதூர் -கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பீட முதலாம் வருட மாணவன், மற்றொருவர் பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்த 19வயது இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.

ரிப்பர் வாகனச் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்களும் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.